நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே உள்ள கோப்பன்னம்பாளையம் கிராமத்தைச் சேந்தவர் நிர்மலா (16). இவருக்கு பரமத்தி அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்திருப்பதாக மருத்துவமனை சார்பில் பரமத்தி மகளிர் காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, மருத்துவமனைக்கு வந்த காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், நிர்மலாவின் தாய்மாமன் ஆனந்த் (22) என்பவர் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைக் கூறி நிர்மலாவை பாலியல் வல்லுறவு செய்திருப்பது தெரியவந்துள்ளது.
இதனால் நிர்மலா கருவுற்ற நிலையில், கடந்த 12ஆம் தேதி பரமத்தி அரசு மருத்துவமனையில் நிர்மலாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
காவல் துறையினர் கைது செய்த தாய்மாமன் மேலும், திருமண வயதை எட்டாத சிறுமியை ஆசை வார்த்தைக் கூறி பாலியல் வல்லுறவு வைத்ததற்காக ஆனந்தை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். அதன்பின், பரமத்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: மாற்றான் மனைவி மீது மோகம்: சகோதரியின் குடும்பத்தினருக்கு நேர்ந்த பயங்கரம்!