தமிழ்நாடு

tamil nadu

பொள்ளாச்சி விவகாரத்தில் யாரையோ காப்பாற்ற முயல்கிறார்கள்- நக்கீரன் கோபால்

By

Published : Apr 2, 2019, 12:02 AM IST

சென்னை: பொள்ளாச்சி விவகாரத்தில் காவல்துறை யாரையோ காப்பாற்ற முயல்வதாக நக்கீரன் கோபால் குற்றம்சாட்டியுள்ளார்.

நக்கீரன் கோபால்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் நக்கீரன் போபால் சிபிசிஐடியில் விசாரணைக்கு ஆஜாரானார். நான்கு மணிநேர விசாரணைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நக்கீரன் கோபால்,

"இந்த விவகாரத்தை வெளியில் கொண்டு வருவதற்கு நீ யார் என யோசிக்க வைத்து விட்டனர்.இந்த விவகாரத்தில் யாரையோ இவர்கள் காப்பாற்ற முயல்கிறார்கள் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது. ஒரு பெரிய அவலத்தை வெளிகொண்டு வந்தோம். இன்று ஏன் இந்த விவகாரத்தை வெளியில் கொண்டு வந்தேன் என்ற மன வேதனைக்கு ஆளாக்கிவிட்டனர். கிட்டதட்ட 30 முதல் 40 கேள்விகள் என்னிடம் கேட்கபட்டது. மேலும் இந்த விவகாரம் குறித்து இதழ்களில் ஒவ்வொரு வரிக்கும் விளக்கம் கேட்டனர். இது குறித்த விளக்கம் கொடுத்த பின்னர் எனக்கு மற்றொரு சம்மன் அளித்துள்ளனர்.

செய்தியாளர்களிடம் பேசிய நக்கீரன் கோபால்

இது போன்ற செயலை ஊடகங்கள்,மக்கள் மத்தியில் கொண்டு வருவதில் என்ன தவறு உள்ளது. விசாரணைநடத்தியதை வெளியில் சொல்லகூடாது எனவும் காவல்துறை அதிகாரிகள் என்னிடம் கூறுகின்றனர். உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில்தான் இங்கு விசாரணைக்கு ஆஜரானேன். இந்த விவகாரத்தில் பின்னணியில் பல பேர் மற்றும் பல உயர் அதிகாரிகள் உள்ளனர் என்பது தெளிவாக தெரிகிறது.

நக்கீரன் இதழில் வெளியான தகவல்களை கொண்டே காவல்துறை விசாரணைநடத்தவுள்ளோம் எனக் கூறுகின்றனர். இந்த விவகாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களை காப்பற்றவே இது போன்ற செயல்பாடுகளை காவல்துறை செய்து வருகிறது. இது போன்று செயல்களை செய்து பத்திரிகைகளை காவல்துறை மிரட்ட பார்க்கிறது. விசாரணையின்போது என்னை பெரும்பாலும் கேள்வி கேட்டவர்கள் அனைவரும் பெண்களே.

என்னை கேள்வி கேட்ட பெண் அதிகாரிகள் அந்த வீடியோவை பார்த்தார்களா என தெரியவில்லை. நக்கீரன் கோபால், உங்களுக்கு யார் இது போன்ற தகவல்களையும் குற்றவாளிகள் எங்கு இருக்கிறார்கள் என்பது குறித்தும் யார் சொல்கிறாகள் என கேட்கிறார்கள்.பல தகவல்களை வெளிக்கொண்டு வந்துள்ளோம் குறிப்பாக நித்தியானந்தா, நிர்மலா தேவி உள்ளிட்டோரை வெளியே கொண்டு வந்துள்ளோம். ஆனால் இந்த விவகாரம் மிகுந்த மன உளச்சலை ஏற்படுத்தி விட்டது. இதழில் பல தகவல்களை பதிவு செய்திருப்போம். ஆனால் அவர்களின் பெயர்களை மாற்றி பதிவு செய்திருப்போம். காவல்துறை அவர்களின் உண்மை பெயரை கேட்கிறது"இவ்வாறு அவர் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details