சீர்காழியை அடுத்த கொள்ளிடம், கேஏபி நகரைச் சேர்ந்தவர் பழனிவேல் (60). குடிநீர் வடிகால் வாரிய பொறியாளரான இவர், குடும்பத்தினருடன் வெளியூர் சென்று இருந்தார்.
பொறியாளர் வீடு புகுந்து 36 சவரன் தங்கம், பணம் திருட்டு - நாகப்பட்டினம்
நாகப்பட்டினம்: கொள்ளிடம் அருகே பொறியாளர் வீட்டில் 36 பவுன் நகைகள், பணம், வெள்ளி பொருட்கள் திருட்டி செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று காலையில் பழனிவேல் வீட்டின் முன்புற கதவு திறந்து கிடந்துள்ளது. அதனைக்கண்ட அவரது உறவினர்கள் அளித்த தகவலின் பேரில் மாலை ஊர் திரும்பிய பழனிவேல் வீட்டின் கதவு உடைத்து திறக்கப்பட்டு இருப்பதையும், அறையில் இருந்த பீரோ திறக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 36 பவுன் நகைகள், 1.5 லட்சம் பணம் இரண்டு கிலோ வெள்ளிப் பொருட்களை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்று இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து கொள்ளிடம் காவல் நிலையத்தில் பழனிவேல் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர். திருடப்பட்ட நகை, பொருள்களின் மதிப்பு சுமார் 11 லட்சம் ரூபாய் ஆகும். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.