திருவள்ளூர் மாவட்டம் பெரியகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ஷியாம் (20). இவர் நேற்றிரவு தனது நண்பர்களுடன் திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த பொன்ராஜ் (37) என்பவர் ஒரு காரில் மதுபோதையில் அமர்ந்து இருந்ததாகக் கூறப்படுகிறது.
மதுபோதையால் நேர்ந்த விபரீதம் - ஒருவர் உயிரழப்பு! - குடிபோதையால் நேர்ந்த விபரீதம்!
திருவள்ளூர்: பெரியகுப்பம் அருகே மதுபோதையில் இருந்த நபர் ஒருவர், அவர் வசிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொருவரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
![மதுபோதையால் நேர்ந்த விபரீதம் - ஒருவர் உயிரழப்பு!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4601285-292-4601285-1569843194679.jpg)
இந்நிலையில், மதுபோதையிலிருந்த பொன்ராஜ், ஷியாமை அழைத்து சிகரெட் வாங்கிவர சொல்லியிருக்கிறார். அதற்கு ஷியாம் மறுத்ததனால் அவர் தனது காரிலிருந்த கத்தியை எடுத்து ஷியாமை சரமாரியாகக் குத்தியுள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்துக் கொண்டிருந்த அவரை அவரது நண்பர்கள் மருத்துமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதை அறிந்த ஷியாமின் நண்பர்கள், உறவினர்கள் உள்ளிட்டோர் பொன்ராஜ் வீட்டை அடித்து நொருக்கி, காரை எரித்துள்ளனர். மேலும், இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து பொன்ராஜை தேடி வருகின்றனர்.