தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

லிஃப்டில் சிக்கி குழந்தை உயிரிழந்த பரிதாபம்! - மின்தூக்கி விபத்து குழந்தை பலி

தாராவியில், குழந்தை ஒன்று மின்தூக்கியில் சிக்கி தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டு உயிரிழந்தது. சம்பவத்தை அடுத்து மருத்துவமனைக்கு விரைந்து அழைத்து செல்லப்பட்ட குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர்.

Lift accident in Mumbai
Lift accident in Mumbai

By

Published : Nov 29, 2020, 8:37 AM IST

தாராவி (மகாராஷ்டிரா): மின்தூக்கியில் சிக்கி ஐந்து வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

உடன் பிறப்புகளுடன் மின்தூக்கியில் சென்று கொண்டிருந்த முகமது ஹுசைஃபா ஷேக் (5), 4ஆவது மாடியை அடைந்தவுடன் இறங்க தவறியுள்ளார். பின்னர் ஐந்தாவது மாடி நோக்கி நகர்ந்த மின்தூக்கியின் கதவுகளுக்கு இடையே சிக்கிய அவர், தலையில் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டார்.

"கோவிஷீல்டு" தடுப்பூசி பரிசோதனையால் பாதிப்பு: நஷ்டஈடு கேட்டு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு வக்கீல் நேட்டீஸ்!

உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாலேயே அவர் இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தாராவியின் பல்வாடி பகுதியிலுள்ள கோஸி ஷெல்டர் கட்டடத்தில் பகல் 12:30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஷாஹுநகர் காவல் துறையினர் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, கண்காணிப்புப் படக்கருவியின் பதிவுகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details