தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

பெரம்பலூரில் தாய், 2 மகள்கள் தற்கொலை! - தாய் மற்றும் 2 மகள்கள் தற்கொலை

பெரம்பலூர்: வேப்பந்தட்டை அருகே தாய் மற்றும் 2 மகள்கள் தற்கொலை செய்துகொண்டது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

suicide
suicide

By

Published : Nov 24, 2020, 11:02 PM IST

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் விகளத்தூர் மில்லத் நகரைச் சேர்ந்தவர் சாகுல் ஹமீது. இவர் வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ரஹமத் நிஷா. இவர்களுக்கு ஷபா, ஷனா என்ற 2 பெண் குழந்தைகள் இருந்துள்ளனர்.

ரஹ்மத் நிஷா தனது குழந்தைகளுடன் மில்லத் நகரில் உள்ள தங்களது வீட்டின் முதல் மாடியில் வசித்து வந்தார். அதே வீட்டில் கீழ் தளத்தில் அவரது மாமனார், மாமியார் வசித்து வருகின்றனர். ரஹமத் நிஷா தனது மாமனார், மாமியாருடன் சில மாதங்களாக பேசவில்லை என தெரிகிறது.

இந்நிலையில், இன்று (நவ.24) ரஹமத் நிஷா தங்கியிருந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியது. இதனால், அக்கம் பக்கத்தினர், சந்தேகமடைந்து வி.களத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு ரஹமத் நிஷா தூக்கில் சடலமாக தொங்கிய நிலையிலும், 2 குழந்தைகளும் இறந்த நிலையில் படுத்து கிடந்தனர்.

இறந்தவர்களின் உடலில் இருந்து துர்நாற்றம் வீசியதால், இரண்டு நாள்களுக்கு முன்பு இருந்திருக்கக் கூடும் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். பின்னர், இறந்தவர்களின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த விகளத்தூர் காவல்துறையினர், இறந்த ரஹமத் நிஷா குடும்ப தகராறில் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் கொலை செய்துள்ளனரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:மூன்று நாள் அரசின் நினைவு தினம் இன்று - பதிலடி கொடுத்த சிவசேனா

ABOUT THE AUTHOR

...view details