கரூர் மாவட்டம், லாலாப்பேட்டையை அடுத்துள்ள வெள்ளாளப்பட்டியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 35). கூலித்தொழில் செய்துவரும் இவரது மனைவி முத்துலட்சுமி (வயது 30). சிபிக்ஷா (வயது 8), கிஷாந்த் (வயது 6), கிதிக் ஷா (வயது 3) ஆகிய மூன்று குழந்தைகள் இவர்களுக்கு உள்ளனர்.
இந்நிலையில், உடல் பரிசோதனைக்காக தன்னை மருத்துவமனை அழைத்துச் செல்லுமாறு முத்துலட்சுமி பல நாள்களாக தனது கணவரிடம் கேட்டு வந்ததாகவும், ஆனால் அவரை மருத்துமனைக்கு அழைத்துச் செல்லாமல் காலம் தாழ்த்தி வந்ததால், இருவருக்குமிடையே நேற்று தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த முத்துலட்சுமி, அரளி விதையை அரைத்து மூன்று குழந்தைகளுக்கும் கொடுத்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.