தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

தரமணியில் தாய், மகள் சடலம் மீட்பு: கொலையா, தற்கொலையா? - சென்னை தாய், மகள் கொலை

சென்னை: தரமணியில் வீட்டில் அழுகிய நிலையில் தாய், மகள் சடலமாக மீட்கப்பட்டதையடுத்து, இளைய மகளுடன் தப்பியோடிய கணவரை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

தரமணியில் தாய், மகள் சடலம் மீட்பு: கொலையா? தற்கொலையா?
தரமணியில் தாய், மகள் சடலம் மீட்பு: கொலையா? தற்கொலையா?

By

Published : Dec 10, 2020, 7:03 AM IST

சென்னை தரமணி பள்ளிப்பட்டு பஜனை கோவில் பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக குடியிருந்துவருபவர் கீத கிருஷ்ணன். இவரது மனைவி கல்பனா (36) தனியார் கல்லூரியில் துணைப் பேராசிரியராகப் பணிபுரிந்துவந்துள்ளார். இவர்களுக்கு 8ஆம் வகுப்பு படிக்கக்கூடிய 14 வயது குனாளினி என்ற மகளும், 10 வயதில் ஒரு மகளும் இருந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக கீத கிருஷ்ணன் வீடு திறக்கப்படாமல் இருந்துள்ளது. மேலும் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதால் வீட்டின் உரிமையாளரான தண்டபாணி கோட்டூர்புரம் காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்துள்ளார்.

தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மூடியிருந்த வீட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, தாய் கல்பனா தூக்கில் தொங்கியபடி பிணமாக அழுகிய நிலையிலும், மூத்த மகள் குனாளினி மது அருந்திய நுரை தள்ளியபடி இறந்து கிடந்துள்ளனர். உடனடியாக இருவரது உடலையும் மீட்டு உடற்கூராய்விற்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதற்கிடையே வீட்டிலிருந்து இரு கடிதங்களை காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர். அந்தக் கடிதத்தில் கோதண்டபாணி, சந்திரசேகர் ஆகியோர் லோன் வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததால் தற்கொலை செய்துகொண்டதாகவும், தங்களது மரணத்திற்கு காரணம் இருவரும்தான் என எழுதி இருந்தது.

இதனால் கோட்டூர்புரம் காவல் துறையினர் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து கோதண்டபாணி, சந்திரசேகரன் யார் என்பது குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதுமட்டுமில்லாமல் கல்பனாவின் கணவரான கீத கிருஷ்ணன், இளைய மகள் வீட்டில் இல்லாததால் கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளாரா என்ற கோணத்திலும் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க...விடுதலை நாளிதழ் கோயில்!

ABOUT THE AUTHOR

...view details