தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

போட்டோகிராபர், டிஎஸ்பி எனக் கூறி பண மோசடி - பாதிக்கப்பட்ட நபர் புகார் - தருமபுரி மாவட்ட செய்தி

தருமபுரி: தருமபுரி எஸ்.பி. அலுவலக போட்டோகிராபர், டிஎஸ்பி எனக் கூறி பண மோசடி செய்த நபர் மீது அழகுசுந்தரம் என்பவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகாரளித்தார்.

alakusundaram
alakusundaram

By

Published : Oct 23, 2020, 10:28 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் வீரப்பன் நகரில் வசித்து வருபவர் அழகு சுந்தரம். வருமானவரி ஆலோசகராக பணியாற்றி வரும் இவர், தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.

அந்தப் புகார் மனுவில், கர்நாடக மாநிலம் பேகூரைச் சேர்ந்த சித்துராஜ் என்பவர் தனக்கு 15 லட்சம் ரூபாய் பணம் தர வேண்டியுள்ளது. இதனால், கடந்த 2019ஆம் ஆண்டு தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் செய்தேன். இதுதொடர்பான விசாரணைக்கு ஆஜராக வந்த என்னிடம் முஜிப் பாஷா, ராதாகிருஷ்ணன் ஆகிய இருவரும் அணுகினார்கள்.

முஜிப் பாஷா காவல்துறையில் டிஎஸ்பியாக பணியாற்றி வருவதாகவும், எஸ் பி. டி ஐ ஜி வரை நல்ல பழக்கம் உள்ளதால் பழக்கவழக்கத்தை பயன்படுத்தி தனக்கு வரவேண்டிய தொகையை பெற்றுத் தருவதாகவும் கூறினர்.

இதனிடையே, இவர்கள் இருவரும் சித்துராஜை விசாரணைக்காக, தருமபுரியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் 10 நாள்கள் அடைத்து வைத்து பணத்தை வசூல் செய்துவிட்டு அனுப்பி வைத்துள்ளனர்.

முஜீப் பாஷா தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் போட்டோகிராபராக பணிபுரிந்து கொண்டு டிஎஸ்பி என ஏமாற்றியது தெரியவந்துள்ளது.

டிஎஸ்பி என ஏமாற்றிய முஜிப் பாஷா மற்றும் ஓய்வுபெற்ற மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுத்து தனக்கு வரவேண்டிய 15 லட்சம் பணத்தை பெற்றுத் தர வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:ஷட்டரை பூட்டி வழக்கறிஞரை தாக்கிய ஹோட்டல் உரிமையாளர் - வழக்கறிஞர்கள் போராட்டம்

ABOUT THE AUTHOR

...view details