சென்னையில் பிராட்வே பகுதியில் சரத்குமார் என்பவர் ஆப்டிகல் கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு பழைய வண்ணாரப்பேட்டை ,கல்லறை சாலை வழியாக சென்றார்.அப்போது அடையாளம் தெரியாத நபர் தன் கையில் வைத்து இருந்த செல்போனை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிவிட்டார்.
தொடர் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட ஆசாமி கைது! - வண்ணாரப்பேட்டை
சென்னை: பழைய வண்ணாரப்பேட்டையில் தொடர் செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்த நபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனைத் தொடர்ந்து சரத்குமார் வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.சரத்குமார் அளித்த புகாரின் பேரில் குற்றவாளியை கண்டுபிடிக்க காவல் துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் வண்ணாரப்பேட்டை, கல்லறை சாலையைச் சேர்ந்த சதீஷ் குற்றவாளி என உறுதிசெய்ததை அடுத்து குற்றப்பிரிவு ஆய்வாளர் ராமசாமி, கண்ணன் ரவுண்டானா அருகே பதுங்கியிருந்த குற்றவாளியை விரைந்துச் சென்று கைது செய்தார்.அதன் பின்னர் கைது செய்த குற்றவாளியை ஹச் ஓன்- வண்ணாரப்பேட்டை காவல்துறையினரால் புழல் சிறையில் அடைத்தனர்.