தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

ஆற்றில் மாயமான இளைஞர் சடலமாக மீட்பு! - தேனி செய்திகள்

உத்தமபாளையம் அருகே முல்லைப் பெரியாற்றில் குளிக்கச் சென்ற இளைஞர் மாயமாகி 5 நாள்களுக்குப்பிறகு சடலமாக மீட்கப்பட்டார்.

missing man found dead in mullai periyar river
missing man found dead in mullai periyar river

By

Published : Jan 9, 2021, 2:35 PM IST

தேனி: உத்தமபாளையம் அருகேயுள்ள க.புதுப்பட்டி பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி என்பவரது மகன் ஜெயப்பிரகாஷ்(24). கேரளாவில் முடி திருத்தும் தொழில் செய்து வந்த இவர், சில தினங்களுக்கு முன் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

ஜனவரி 2ஆம் தேதி க.புதுப்பட்டியிலுள்ள முல்லைப் பெரியாற்றின் யானை கெஜம் பகுதியில் குளிக்கச் சென்ற இவர் மாயமானார். இதையடுத்து குளிக்கச் சென்ற தனது சகோதரனை காணவில்லை என உத்தமபாளையத்தில் காவல் நிலையத்தில் ஜனவரி 3ஆம் தேதி மணிகண்டன் புகாரளித்தார்.

அதனடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, அவரைத் தேடி வந்த நிலையில் 5 நாள்களாகியும் மணிகண்டனை கண்டுபிடிக்க முடியவில்லை. இச்சூழலில் உத்தமபாளையம் அருகே கோகிலாபுரம் கிராமத்திலுள்ள முல்லைப் பெரியாற்றின் கரையோரம் காணாமல் போன மணிகண்டனின் உடல் சடலமாக கரை ஒதுங்கியது.

இதனைக் கண்ட அப்பகுதியினர் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த காவல் துறையினர், தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details