ஹைதராபாத் (தெலங்கானா):நெஞ்சை பதை பதைக்க செய்யும் இந்த அதிர்ச்சி சம்பவம் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் வெள்ளிக்கிழமை (நவ13) நடந்துள்ளது.
ஹைதராபாத் குத்புலாபூர் பகுதியை சேர்ந்தவர் நோதி வேணுகோபால். இவரது மனைவி ஃபதேநகர் தேதாஜி பகுதியை சேர்ந்த லாவண்யா. இவர்களுக்கு 2016ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.
இந்தத் தம்பதியருக்கு 2017ஆம் ஆண்டு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. அதன் பின்னர் கணவர்- மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் பிறந்த வீட்டில் பாதி நாள்கள், புகுந்த வீட்டில் மீதி நாள்கள் வசிக்கும் நிலைக்கு லாவண்யா தள்ளப்பட்டார்.