சென்னை தாம்பரம் அடுத்த கடப்பேரியில் சாய்ராம் மெடிக்கல்ஸ் என்ற பெயரில் மருந்தகம் வைத்து நடத்தி வருபவர் தினேஷ் குமார்(28). இவரது கடைக்கு வந்த நபர் ஒருவர் போதைக்காக சில மாத்திரைகளை மருந்துச் சீட்டு இல்லாமலும், இலவசமாகவும் கேட்டுள்ளார். அப்போது மருந்தக உரிமையாளர் போதைக்கு மாத்திரையை தர முடியாது கூறியுள்ளார்.
இதனால் கோபத்தில் சென்ற அந்த நபர், அவரது நண்பரை அழைத்து வந்து மருந்தக உரிமையாளரை அடையாளம் காட்டிவிட்டு சென்றுள்ளார். அவரும் மருந்தக உரிமையாளரை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கி, இருசக்கர வாகனத்தையும் சேதப்படுத்திவிட்டு தப்பிச் செல்ல முயன்றார். அப்போது பொதுமக்கள் அவரை பிடித்து தாம்பரம் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.