சிவகங்கை: ஆசைக்கு இணங்காத திருமணமான இளம்பெண் வேலை செய்யும் கடைக்குள் புகுந்து, என்.என்.எல். பேருந்து நிறுவன உரிமையாளர் பாண்டிதுரை, அடித்து நொறுக்கும் காட்சி வேகமாக பரவிவருகிறது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கல்லூரி சாலையில் உள்ளது தனியார் மருந்து கடை. இங்கு வேலை பார்க்கும் திருமணமான இளம்பெண்ணுக்கு, என்.என்.எல். பேருந்து உரிமையாளர் பாண்டிதுரை என்பவர் தொடர்ந்து 3 மாதங்களாக பாலியல் தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
முள்புதரில் வீசப்பட்ட பச்சிளங்குழந்தை மீட்பு: காவல் துறை விசாரணை!
மருந்துக் கடையின் உரிமையாளர் ரவி, பாண்டிதுரையை கண்டித்துள்ளார். அதனைத் தொடர்ந்து கடைக்கு அடியாட்களுடன் வந்த பாண்டிதுரை, மருந்தக உரிமையாளர் ரவியையும், அந்த பெண்ணையும் கடுமையாக தாக்கி கல்லால் கடையை அடித்து உடைத்து சேதப்படுத்தியுள்ளார். இந்த தாக்குதலில் அந்தப் பெண் ரத்தவெள்ளத்தில் கடைக்குள் சாய்ந்து விழுந்தார்.
கடைக்குள் புகுந்து தாக்கும் காணொலி பதிவுகள் அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காரைக்குடி வடக்கு காவல் துறையினர், கடையிலுள்ள கண்காணிப்புப் படக்கருவியின் பதிவுகளை எடுத்து விசாரணை செய்துவருகின்றனர்.
கடை உரிமையாளரும், இளம்பெண்னும் தனித்தனியாக பாண்டிதுரை மீது புகாரளித்துள்ளனர். தொடர்ந்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாண்டிதுரையையும், கடையை அடித்து உடைத்த அடியாட்களையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.