தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து: 6 குழந்தைகள் படுகாயம் - 6 School Children Injured

சேலம்: தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த ஆறு குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்து

By

Published : Sep 4, 2019, 11:48 AM IST

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே மல்லிகுந்தம் பகுதியில் அமைந்துள்ள ஆர்.பி. மெட்ரிகுலேஷன் பள்ளியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் படித்துவருகின்றனர். இந்நிலையில், அப்பள்ளியிலிருந்து குழந்தைகளை ஏற்றிச் சென்ற வேன் மேச்சேரி - பென்னாகரம் செல்லும் வழியில் திப்பரத்தாம்பட்டி என்ற இடத்தில் விபத்துக்குள்ளானது.

தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்து

அப்போது, வேன் கவிழ்ந்த நிலையில் உள்ளே அமர்ந்திருந்த பள்ளிக் குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு அந்த வழியே சென்றவர்கள் குழந்தைகளை காப்பாற்றியுள்ளனர். இதில் திப்பரத்தாம்பட்டி தருண், சாதனா, சூரியனூர் அழகேசன், மேகா, சஞ்சுநிதா, ஷண்முகப்பிரியா உள்ளிட்ட ஆறு குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.

இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட சாதனா சேலம் நியூரோ மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்றுவருவதாகவும்,
மாணவி சண்முகப்பிரியா தனியார் மருத்துவமனை ஒன்றில் மேல் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மற்ற நான்கு குழந்தைகளும் சேலம் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

இந்த விபத்து குறித்து மேச்சேரி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர். விபத்துக்குள்ளாகிய ஓட்டுநரை காவல் துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details