தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

சாலையில் நின்ற லாரியை கள்ளச்சாவி போட்டு திருடிய மெக்கானிக்! - ஆவடி செய்திகள்

சென்னை: சாலையில் நின்றுகொண்டிருந்த லாரியை கள்ளச்சாவி போட்டு திருடிய மெக்கானிக்கை காவல்துறையினர் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

mechanic
mechanic

By

Published : Dec 7, 2020, 1:00 PM IST

ஆவடி, வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் சரவணக்குமார் (31). சொந்தமாக லாரி வைத்து ஓட்டி வரும் இவர், கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி இரவு வழக்கம்போல் தனது வீட்டு முன்பு சாலையில் அதனை நிறுத்தியுள்ளார். மறுநாள் காலை எழுந்து பார்க்கும்போது லாரி மாயமாகியுள்ளது. இது குறித்து சரவணக்குமார் அளித்த புகாரில் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த ஆவடி காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

அங்குள்ள கண்காணிப்பு கேமராவை அவர்கள் ஆய்வு செய்த போது, லாரியை மர்ம நபர் திருடி ஓட்டிச்சென்றது தெரியவந்தது. இதனையடுத்து, தனிப்படை அமைத்து அந்த நபரை காவலர்கள் தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில், இன்று காலையில் ஆவடி-பூந்தமல்லி சாலை, கோவர்த்தனகிரி பகுதியில் தனிப்படை காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக வந்த வேகமாக வந்த லாரியை மடக்கிப் பிடித்தனர்.

பின்னர், லாரி டிரைவரை பிடித்து விசாரித்ததில் அவரிடம் லாரிக்கு உரிய எந்த ஆவணங்களும் இல்லை என்பது தெரியவந்தது. இதனையடுத்து, லாரியுடன் அவரை காவல் நிலையம் அழைத்துச்சென்று தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில், அவர் திருவேற்காடு, மாதுரவேடு, பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த ராஜா (32) என்பது தெரியவந்தது. மெக்கானிக்கான ராஜா, சரவணக்குமாரின் லாரியை கள்ளச்சாவி போட்டு திருடியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து ராஜாவை கைது செய்த காவல்துறையினர், அவரை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: கொடைக்கானலில் கஞ்சா விற்க முயன்றவ‌ர் கைது

ABOUT THE AUTHOR

...view details