தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 1, 2020, 11:11 PM IST

ETV Bharat / jagte-raho

காரை ஓட்ட கொடுக்காததால் ஆத்திரம்: உறவினரே பெட்ரோல் ஊற்றி கொளுத்திய சம்பவம்

சென்னை: புதிய காரை ஓட்ட தராததால் ஆத்திரமடைந்து அந்தக் காரை பெட்ரோல் ஊற்றி உறவினர் கொளுத்திய சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Man tries to fire a cousin car for not giving him for driving
காரை ஓட்ட கொடுக்காததால் உறவினரே பொட்ரோல் ஊற்றி கொளுத்திய சம்பவம்

சென்னை சைதாப்பேட்டை சின்னமலை பகுதியில் வசித்துவருபவர் டோமினிக் (56). இவரது மனைவி பிரின்ஜின், மகன் டார்வின். டோமினிக் பஜாஜ் அலைன்ஸ் நிறுவனத்தில் காப்பீட்டு ஆலோசகராகப் பணிபுரிந்துவருகிறார்.

கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பாக டோமினிக் கார் ஒன்றை வாங்கியுள்ளார். அப்போது டோமினிக் மனைவியின் தம்பி மகனான ஜர்விஸ் என்பவரை டோமினிக்கின் மகன் டார்வின் காரில் ஏற்றவும், ஓட்டவும் கொடுக்காததால் ஆத்திரமடைந்த ஜர்விஸ், கீழே கிடந்த கல்லை எடுத்து கார் கண்ணாடியை அடித்து உடைத்தார். இதனால் டோமினிக் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் ஜர்விஸ் மீது புகார் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து ஜர்விஸுக்கும், டார்வினுக்கும் இடையே பிரச்னை இருந்துவந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று (செப். 30) இரவு 1 மணியளவில் டோமினிக் வீட்டருகே காரில் நண்பர்களுடன் வந்த ஜர்விஸ், திடீரென்று தான் கையில் வைத்திருந்த பெட்ரோலை எடுத்து டோமினிக்கின் கார் மீது ஊற்றி எரித்துவிட்டு தப்பியோடியுள்ளார்.

இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் எரிந்துகொண்டிருந்த காரை உடனடியாக அணைத்தனர். இதனால் காரின் டயர் பகுதி முழுவதும் எரிந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. சிசிடிவி காட்சிகளை வைத்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: 250 கிலோ குட்கா போதைப்பொருள்கள் கடத்தல்!

ABOUT THE AUTHOR

...view details