சென்னை கொளத்தூர் சத்யசாய் நகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன்(43). இவர் திரு.வி.க. நகர் பேருந்து நிலையம் அம்ரீஷ் மஹால் அருகே நேற்று மாலை குடிபோதையில் இருந்துள்ளார். அப்போது மர்ம நபர் ஒருவர் திடீரென்று தனது கையில் வைத்திருந்த கத்தியால் முருகனின் கனுக்காலுக்கு மேல் குத்திவிட்டு தப்பித்து சென்றுள்ளார்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த முருகனை அருகிலிருந்த பொதுமக்கள் ஆட்டோவில் ஏற்றி பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்றுவந்த முருகன் அதிக ரத்தப்போக்கு காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.