மாங்காட்டை அடுத்த கோவூர், அனு கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் யுவராஜ் (28). பெயிண்டர் வேலைசெய்து வந்த இவர், நேற்று இரவு வீட்டிலிருந்து சென்றிருக்கிறார். காலை வரை வீடு திரும்பாததால், அவரது பெற்றோர் தேடிப்பார்த்தபோது, ஈஸ்வரன் நகர் பகுதியில் யுவராஜ் வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். தகவல் அறிந்ததும் நிகழ்விடத்திற்கு வந்த காவல் துறையினர் யுவராஜின் உடலை மீட்டு உடற்கூறாய்விற்கு அனுப்பி வைத்தனர்.
இளைஞர் அரிவாளால் வெட்டிப் படுகொலை - கொலையாளி யார்? - இளைஞர்
சென்னை: மாங்காடு அருகே இளைஞர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டதை அடுத்து கொலையாளியை காவல் துறையினர் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.
கொலைகுறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில், யுவராஜ் திருமணமாகி மனைவியைப் பிரிந்து வாழ்வதாகவும், மனைவி வீட்டாருக்கும் யுவராஜுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், கொலை செய்யப்பட்ட இடத்தில் காலி மதுபான பாட்டில்கள் கிடந்ததால், மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறு காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்திலும், கொலையாளிகள் கொலைக்கு பயன்படுத்திய அரிவாளை அங்கேயே விட்டுச் சென்றுள்ளதால், யுவராஜ் மனைவியின் குடும்பத்தினர் கொலை செய்தார்களா? அல்லது முன்விரோதம் காரணமா என்ற கோணங்களிலும் காவல் துறையினர் விசாரணை செய்துவருகின்றனர்.
இதையும் படிங்க: மனைவி, 2 மகன்களை கொலைசெய்த நகைக்கடை அதிபர் தற்கொலை முயற்சி