தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

திருட முடியாத ஆத்திரத்தில் பைக்குக்கு தீ வைத்து கொளுத்திய நபர்! - சிசிடிவி காட்சி - man fires bike after failed attempts of stealing house

வேலூர்: திருட முடியாத காரணத்தால் வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை தீ வைத்து கொளுத்திய நபர் கைது செய்யப்பட்டார்.

இருசக்கர வாகனத்தை தீ வைத்து கொளுத்திய நபர் கைது
இருசக்கர வாகனத்தை தீ வைத்து கொளுத்திய நபர் கைது

By

Published : Oct 13, 2020, 1:55 AM IST

வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த செங்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் பிரேம் நவாஸ். இவர் சம்பவ தினத்தன்று தனது நண்பரான யோகராஜின் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று இரவு தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டு வாசலில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் தீடிரென தீப்பற்றி எரிந்துள்ளது.

இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் கூச்சலிட்டதால், நவாஸ் வெளியே வந்து அதிர்ச்சியுடன் தீயை அணைக்க முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் அதற்குள் இருசக்கர வாகனம் முழுவதும் தீயில் எரிந்தது. இதுகுறித்து இவர் காட்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், நவாஸின் அக்கம்பக்கத்து வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வுசெய்து பார்த்த போது, பக்கத்து தெருவைச் சேர்ந்த அஜித் என்பவர் வாகனத்தில் இருந்த பெட்ரோலை துணியில் நனைத்து தீ வைத்து கொளுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

இருசக்கர வாகனத்தை தீ வைத்து கொளுத்திய நபர் கைது

இதனையடுத்து அஜித்தை கைது செய்து விசாரித்த போது, அக்டோபர் 5, 6 ஆகிய தேதிகளில் இவர் நவாஸ் வீட்டில் திருட முயன்றும் அப்போது திருட முடியாமல் போன ஆத்திரத்தில் இருசக்கர வாகனத்தை கொளுத்தியது தெரியவந்தது.

இதையும் படிங்க: டென்ட்டில் தங்கி, அரைக்கால் ட்ரவுசர் அணிந்து திருடி வந்த கும்பல் - சிக்க வைத்த சிசிடிவி காட்சி

ABOUT THE AUTHOR

...view details