இராமேஸ்வரத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருபவர் ராஜா (37). இவர் கடந்த 15 ஆண்டுகளாக முகாமில் தங்கி பெயிண்ட் அடிக்கும் பணி செய்து வருகிறார்.
இவரும், இலங்கை கிளிநொச்சியைச் சேர்ந்த சர்மா(எ) தசிகுமார் (36) என்பவரும் இலங்கையில் இருக்கும் போது நண்பர்களாகியுள்ளனர். ராஜாவை சந்திப்பதற்காக சர்மா கடந்த மாதம் பாஸ்போர்ட் இல்லாமல் கடல்வழியாக படகு மூலம் இராமேஸ்வரம் வந்துள்ளார்.
இதனால் முகாமில் தங்கமுடியாது, மேலும் வெளியில் இருந்தாலும் பிரச்னை வரும் என அறிந்த ராஜா, இது பற்றி கியூ பிராஞ்ச் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையறிந்த சர்மா அங்கிருந்து தப்பி தலைமறைவாகியுள்ளார். இது குறித்து காவலர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர்.