தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

சிறுமிகளை பாலியல் வன்புணர்வு செய்த நபர் போக்ஸோவில் கைது! - போக்ஸோவில் கைது

சென்னை: தாம்பரம் பகுதியில் தொடர்ச்சியாக பல சிறுமிகளை பாலியல் வன்புணர்வு செய்த நபரை போக்ஸோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்து சிறையிலடைத்தனர்.

Man arrested for sexually abusing minor girls
Man arrested for sexually abusing minor girls

By

Published : Jul 9, 2020, 3:43 AM IST

சென்னை அடுத்த கிழக்கு தாம்பரம் நாகம்மை தெருவை சேர்ந்த கூலித்தொழிலாளி உதயகுமார்(36). ஊரடங்கு உத்தரவால் வேலையின்றி கடந்த மூன்று மாதங்களாக வீட்டில் இருந்துள்ளார்.

இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் சிறுமி ஒருவர் தனது பெற்றோர்களிடம் உதயகுமார் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக தெரிவித்துள்ளார்.

பின்னர் இது குறித்து சிறுமியின் பெற்றோர்கள் உதயகுமாரிடம் கேட்டபோது, அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சிறுமியின் பெற்றோர்கள் தாம்பரம் மகளிர் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளனர்.

இந்தப் புகாரின் அடிப்படையில் உதயகுமாரை கைது செய்த காவல்துறையினர், அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அப்பகுதியில் இருக்கும் நான்கு சிறுமிகளிடம் தொடர்ச்சியாக பாலியல் தொந்தரவில் அவர் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் இதுதொடர்பாக உதயகுமார் மீது சேலையூர் காவல் நிலையத்தில் ஏற்கனவே ஒரு வழக்கு நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.

இதையடுத்து உதயகுமார் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவரை நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: ஒட்டன்சத்திரத்தில் சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர் கைது!

ABOUT THE AUTHOR

...view details