புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே உள்ள கமலக்குடி கிராமத்தில் கள்ளத்தனமாக மண்பானையில் சாராயம் காய்ச்சு விற்பதாக காவல் நிலையத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் ஆவுடையார்கோவில் காவல் உதவி ஆய்வாளர் ரவிசந்திரன் தலைமையில் தனிப்பிரிவு தலைமைக் காவலர் பாலசுப்பிரமணியன், காவலர்கள் தினகரன் பார்த்தசாரதி ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்றனர்.
ஆவுடையார்கோவில் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சி விற்றவர் கைது - கள்ளச்சாராயம் விற்பனை
புதுக்கோட்டை: ஆவுடையார்கோவில் அருகே வீட்டில் சாராயம் காய்ச்சிய நபரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.
கள்ளச்சாராயம் காய்ச்சி விற்றவர் கைது
அப்போது பழனிவேல் (65) என்பவர், தனது வீட்டின் பின் பகுதியில் 20 லிட்டர் சாராய உருளையை மண்ணுக்குள் பதுக்கிவைத்திருந்ததைக் கண்டுபிடித்தனர்.
இதையும் படிங்க: ராணிப்பேட்டையில் 7 டன் ரேஷன் அரிசியை கடத்திய 3 பேர் கைது