கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை அடுத்த எலவனாசூர்கோட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், கள்ளத்துப்பாக்கி புழக்கம் அதிகமிருப்பதாகவும், அவற்றைக் கொண்டு வனவிலங்குகள் வேட்டையாடுவதாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியோவுல் ஹக் ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவு படி, எலவனாசூர்கோட்டை காவல்துறையினர், அந்த பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் போது, எறையூர் கிராமத்தைச் சேர்ந்த குழந்தைராஜ் (30) என்பவர் கள்ளத்தனமாக துப்பாக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து நாட்டுத் துப்பாக்கி ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது.
கள்ளத்தனமாக நாட்டுத் துப்பாகி வைத்திருந்தவர் கைது: துப்பாக்கியும் பறிமுதல்!
உளுந்தூர்பேட்டை அருகே கள்ளத்தனமாக நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து நாட்டுத் துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.
நாட்டுத் துப்பாகி வைத்திருந்தவர் கைது