விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மதுவிலக்கு சிறப்பு பிரிவு உதவி ஆய்வாளர் அழகிரி தலைமையிலான காவல் துறையினர், வளத்தி பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கிடமான வகையில் அதிவேகமாக வந்த நான்கு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில் எந்த விதமான உரிமமோ, அனுமதியோ இன்றி 21 பெட்டிகளில் 1,008 புதுச்சேரி மதுபான பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, மதுபாட்டில்களை பறிமுதல் செய்த காவல் துறையினர், கடத்தலில் ஈடுபட்ட வி.மருதூரைச் சேர்ந்த வீரசெழியன் என்பவரை கைது செய்தனர்.