தியாகராயர் நகர் மூசா தெருவில் ராஜேந்திர குமார் என்பவருக்கு சொந்தமான மொத்த வியாபார நகைக்கடையில், நள்ளிரவில் புகுந்த கொள்ளையர்கள் இருவர், 2.5 கோடி மதிப்புடைய நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். கடந்த 21ஆம் தேதி நடந்த இந்த கொள்ளை நிகழ்வு தொடர்பாக, 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொள்ளையர்கள் தீவிரமாக தேடப்பட்டு வந்தனர்.
இதனிடையே, செல்போஃன் சிக்னல் மூலம் கொள்ளையர்களின் எண்ணை கண்டறிந்த காவல் துறையினர், கோடம்பாக்கத்தை சேர்ந்த சுரேஷ் என்ற மார்க்கெட் சுரேஷ் என்ற கொள்ளையனை திருவள்ளூரில் கைது செய்தனர்.
இதையடுத்து கொள்ளை வழக்கின் முக்கிய குற்றவாளியான அப்புனு என்ற வெங்கடேசன் தலைமறைவாக இருந்த நிலையில், செய்யாறில் பதுங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு தனிப்படை அங்கு விரைந்தது. வெங்கடேசனின் தோழியையும், கூட்டாளியையும் முதலில் பிடித்த காவல் துறையினர், அவர்கள் கொடுத்த தகவலை வைத்து கொள்ளையன் வெங்கடேசனை கைது செய்தனர். பின்னர் அவரை சென்னைக்கு அழைத்து வந்து கொள்ளையடித்த நகைகள் குறித்து விசாரித்து வருகின்றனர்.
தி.நகர் நகைக்கடை கொள்ளை - முக்கிய குற்றவாளி கைது! இதையும் படிங்க: ஆட்டோவில் கடத்தப்பட்ட 148 மதுபாட்டில்கள் பறிமுதல்