தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

பள்ளி மாணவியைக் கடத்திச்சென்று கட்டாய திருமணம்: இளைஞர் மீது பாய்ந்தது போக்சோ! - மதுரை குற்றம்

அலங்காநல்லூர் அருகே பள்ளி மாணவியைக் கடத்திச் சென்ற இளைஞர் கட்டாய திருமணம் செய்துகொண்டார். மறைந்திருந்த அவரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைதுசெய்து சிறையிலடைத்தனர்.

madurai youth arrested in pocso
madurai youth arrested in pocso

By

Published : Dec 19, 2020, 7:07 AM IST

மதுரை:அலங்காநல்லூர் அருகே பள்ளி மாணவியைக் கடத்திச் சென்று கட்டாய திருமணம் செய்துகொண்ட இளைஞர் போக்சோ சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டார்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகேயுள்ள காந்திகிராமம் பகுதியைச் சேர்ந்தவர் வல்லரசு (22). இவர் டிப்ளமோ படித்து முடித்துவிட்டு வேலைக்குச் செல்லாமல் ஊர் சுற்றித் திரிந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இவ்வேளையில், அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவியை ஆசைவார்த்தை கூறி, திருமணம் செய்துகொண்டு திண்டுக்கல் அருகே தனது உறவினர் வீட்டில் அடைத்துவைத்துள்ளார். இது குறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து, காவல் துறையினர் மாணவியைத் தேடிவந்தனர்.

அப்போது, மாணவி திண்டுக்கல் பகுதியில் இருந்ததை அறிந்த மதுரை சமயநல்லூர் அனைத்து மகளிர் நிலைய காவல் துறையினர் அங்கு விரைந்து, இளைஞர் வல்லரசை பிடித்து விசாரணை நடத்தினர்.

இதில் சிறுமியை திருமணம் செய்துகொண்டதை ஒப்புக்கொண்ட அவர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், நீதிமன்றத்தின் முன்னிறுத்திய பின் சிறையிலடைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details