மதுரை மாநகரில் கொலை, கொள்ளை, கஞ்சா விற்பனை என பத்துக்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி வெள்ளை காளியை கடந்த வாரம் காவல் துறையினர் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து வெள்ளை காளியின் கூட்டாளியான கார்த்திக் என்ற அகோர கார்த்திக் தலைமறைவாக இருந்து வந்தார்.
மதுரை கீரைத்துறை மின் மயானம் அருகே உள்ள குப்பை மேட்டில் கஞ்சா மூட்டையுடன் கார்த்திக் பதுங்கி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை சுற்றி வளைத்து பிடித்த காவல் துறையினர், அவரிடமிருந்து 30 கிலோ கஞ்சா மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.