மதுரை விராட்டிபத்து பகுதியில் அழகு நிலையம் என்ற பெயரில் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடப்பதாக எஸ்.எஸ். காலனி காவல் நிலையத்திற்கு வந்த புகாரின் பேரில் காவல் துறையினர் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஜெய்நகர் பகுதியில் தனியார் நிதி நிறுவனத்தின் பெயரில் வாடகைக்குக் கட்டடம் எடுத்து வேலை வாங்கித் தருவதாகக் கூறி வடமாநிலத்திலிருந்து அழைத்து வந்த பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரியவந்தது.
அழகு நிலையம் என்ற பெயரில் பாலியல் தொழில்! - beauty saloon
மதுரை: அழகு நிலையம் என்ற பெயரில் பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த ஒரு பெண் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அழகு நிலையம் என்ற பெயரில் விபச்சாரம்!
அதனைத் தொடர்ந்து டெல்லியைச் சேர்ந்த ஜனத் என்ற பெண் உட்பட நான்கு பெண்களை மீட்ட காவல் துறையினர், பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக முதர்சீர், ஜெயவேல், அவருடைய மனைவி ஜீவ பிரியதர்ஷினி, அனீஸ் ஆகிய நான்கு பேரைக் கைது செய்தனர். மேலும் மீட்கப்பட்ட பெண்கள் திருப்பாலையில் உள்ள அரசு பெண்கள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர். குற்றவாளியான நான்கு பேரையும் நீதிமன்றத்தில் முன்னிறுத்திய காவல் துறையினர் மதுரை மத்தியச் சிறையில் அடைத்தனர்.
Last Updated : Apr 29, 2019, 9:14 AM IST