மதுரை பெத்தானியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வேலாயுதம்; அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அஞ்சனாதேவிக்கும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளன. இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று (டிச.11) நள்ளிரவில் வீட்டில் அனைவரும் தூங்கிக்கொண்டிருந்த போது, பணி முடித்து வீட்டிற்கு வந்த வேலாயுதம் அசந்து உறங்கி கொண்டிருந்த மனைவி அஞ்சனாதேவியின் தலையில் கிரைண்டர் கல்லை தூக்கி போட்டு கொடூரமாக கொலை செய்துள்ளார். இதில் மனைவி அஞ்சனாதேவி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.