தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

பைக்கை கொளுத்திய இரண்டு பெண்கள் யார்? போலீஸ் விசாரணை - cctv viral

மதுரவாயல் அருகே வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருச்சக்கர வாகனத்தை தீ வைத்து எரித்த இரண்டு பெண்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர். தீ வைத்து கொளுத்திய பெண்கள் யார்? எதற்காக தீ வைத்தார்கள் என்பது குறித்து மதுரவாயல் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

chennai crime
chennai crime

By

Published : Oct 3, 2020, 10:21 PM IST

சென்னை: மதுரவாயல் அருகே வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருச்சக்கர வாகனத்தை தீ வைத்து எரித்த இரண்டு பெண்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

மதுரவாயலை அடுத்த ஆலப்பாக்கம், மெட்ரோ நகர் பகுதியிலுள்ள வீட்டில் அழகர்சாமி என்பவர் மேனேஜ்மெண்ட் நிறுவனம் நடத்தி வருகிறார். அங்கு சங்கர், சதாம் உசேன் ஆகிய இரண்டு பேர் வேலை செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் (அக்.1) உணவு சாப்பிடுவதற்காக அலுவலகத்தை பூட்டி விட்டு, இருவரும் வெளியே சென்றுள்ளனர்.

சிறிது நேரத்தில் வீட்டின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருச்சக்கர வாகனத்தில் தீப்பிடித்து எரிவதாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தெரிவித்த தகவலையடுத்து, உடனடியாக இருவரும் திரும்பி வந்துள்ளனர்.

அப்போது சங்கர் என்பவரின் வாகனம் முழுவதும் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. சதாம் உசேன் என்பவரின் வாகனம் லேசான சேதத்துடன் தப்பியுள்ளது. இதையடுத்து தீயை இருவரும் சேர்ந்து அணைத்துள்ளனர்.

தொடர்ந்து இது குறித்து மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் மதுரவாயல் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். மேலும், அந்தப் பகுதியிலுள்ள இரகசிய கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, இருச்சக்கர வாகனத்தில் முகத்தை மூடியபடி வரும் இரண்டு பெண்களில், ஒருவர் மட்டும் இறங்கி உள்ளே சென்று வாகனத்தை தீவைத்து கொளுத்தி விட்டு பின்னர் அங்கிருந்து செல்வது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தன.

பைக்கை கொளுத்திய இரண்டு பெண்கள் யார்? போலீஸ் விசாரணை

எனவே தீ வைத்து கொளுத்திய பெண்கள் யார்? எதற்காக தீ வைத்தார்கள் என்பது குறித்து மதுரவாயல் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details