தேனி மாவட்டம் கோடாங்கிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தர் (23). இவர் பட்டியிலின வகுப்பைச் சேர்ந்தவர். இந்நிலையில் இவர் தனது வீட்டு வாசலில் கால் மேல், கால் போட்டு, அமர்ந்து பாட்டு கேட்டுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த மாற்று வகுப்பைச் சார்ந்த கண்ணன்( 40) என்பவர் மது போதையில் அவரிடம் தகராறு செய்துள்ளார்.
மேலும் "என் முன்னால், கால் மேல், கால் போட்டு எப்படி பாட்டு கேட்கலாம்" என்று ஆத்திரத்துடன் பேசிய கண்ணன், தான் வைத்திருந்த அரிவாளை எடுத்து சுந்தரின் தலையில் வெட்டியுள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் நிலைகுலைந்து கீழே சரிந்த சுந்தரை அப்பகுதி மக்கள் மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.