கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த கணிசப்பாக்கம் ரயில்வே கிராஸிங்கில் ராமேஸ்வரம் – சென்னை நோக்கிச் சென்ற விரைவு ரயில் முன்பு காதல் ஜோடி இருவர் தற்கொலை செய்துகொண்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த கடலுார் ரயில்வே காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த தொரப்பாடி கிராமத்தைச் சேர்ந்த பாண்டுரங்கன் என்பவரின் மகள் சுவாதி (18) என்றும், கோட்லாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஆதிமூலம் என்பவரின் மகன் மதன் (22) என்பதும் தெரியவந்தது.
நர்சிங் படித்து வந்த சுவாதி மதனை காதலித்து வந்துள்ளார். மதன் பாண்டுரங்கனின் அண்ணன் மகன் ஆவார். முறையில்லாமல் காதலித்ததால் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக இருவரும் கணிசப்பாக்கம் ரயில்வே கேட் அருகே சென்னை - ராமேஸ்வரம் ரயில் முன்பு பாய்ந்துள்ளனர். இதில் அவர்கள் மீது ரயில் ஏறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்பது விசாரணையில் தெரியவந்தது.
முறையில்லா காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு: காதல் ஜோடி தற்கொலை! இதனைத்தொடர்ந்து இருவரது உடலையும் மீட்ட காவல் துறையினர், உடற்கூறாவிற்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க... கோயிலை அகற்றியதால் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் !