நாமக்கல் கணேசபுரத்தில் வசித்து வருபவர் தொழிலதிபர் பொன்னுசாமி. டேங்கர் லாரி, ஃபைனான்ஸ், வணிக வளாகம் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் செய்து வருகிறார். இந்நிலையில், திருச்சி சாலையில் உள்ள டிரான்ஸ்போர்ட் அலுவலகத்தில் இன்று (நவம்பர் 18) பிற்பகல் பொன்னுசாமி இருந்த போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத சிலர், அவரை வலுகட்டயமாக குவாலீஸ் காரில் ஏற்றிச் சென்றனர். இதையடுத்து, அலுவலகத்தில் இருந்த செல்வம், பொன்னுசாமியின் மனைவி நிர்மலாவுக்கு தகவல் தெரிவித்தார்.
நாமக்கல்லில் தொழிலதிபர் கடத்தில் - போலீஸ் விசாரணை - lorry_owner_kidnapped in namakkal
நாமக்கல்: கணேசபுரத்தில் தொழிலதிபர் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
![நாமக்கல்லில் தொழிலதிபர் கடத்தில் - போலீஸ் விசாரணை lorry_owner_kidnapped](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-9584719-873-9584719-1605710495238.jpg)
இது குறித்து, நாமக்கல் காவல் நிலையத்தில் நிர்மலா புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில், குவாலீஸ் காரில் வந்த நபர்கள் பொன்னுசாமியிடம் பேசிக் கொண்டிருந்த நிலையில், அவரை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றும் போது பொன்னுசாமி தப்பிச் சென்றார். பின்னர், அவரை துரத்திச் சென்று மீண்டும் காரில் ஏற்றியது தெரியவந்தது.
நிர்மலா அளித்துள்ள புகாரில் பொன்னுசாமியிடம் ஓட்டுநராக பணியாற்றிய ஈரோடு மாவட்டம் சிவகிரியைச் சேர்ந்த காமராஜ் என்பவருக்கு பணம் கொடுத்தது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ள நிலையில், அவர் மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டார். அது குறித்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.