சென்னை புரசைவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கமலேஷ் கண்ணன் (30). இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணிபுரிந்துவருகிறார். இவர் வீட்டிற்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது 29C பேருந்தானது, புரசைவாக்கம் மில்லர்ஸ் சாலை வழியாகச் சென்றுகொண்டிருந்தது. அப்போது பேருந்தை தவறான பாதையில் இயக்கி வந்ததால், கமலேஷுக்கும், அரசுப் பேருந்து ஓட்டுநர் நிஜந்தன் என்பவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் கோபமடைந்த பேருந்து ஓட்டுநர், பேருந்தை கமலேஷின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளார். பின்னர் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். அப்போது கமலேஷ் தனது கையில் வைத்திருந்த ஸ்ப்ரேவை எடுத்து பேருந்து ஓட்டுநரின் முகத்தில் அடித்ததாகக் கூறப்படுகிறது.