கோயம்புத்தூர் மாவட்டம் முத்துக்கவுண்டன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர், ராஜேஷ்குமார். இவர் சங்கீதா என்ற பெண்ணைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது ராஜேஷ்குமார் மத்திய தொழில் பாதுகாப்புப் படையில் காவலராக நாகலாந்தில் பணியாற்றி வருகிறார்.
இவ்வேளையில், உடனடியாக விடுமுறை எடுத்துக் கொண்டு சொந்த ஊருக்கு வருமாறு சங்கீதா கோரியுள்ளார். ஆனால், உடனடியாக விடுமுறை எடுக்க முடியாது எனவும், பின்னர் வருவதாகவும் ராஜேஷ் குமார் தெரிவித்துள்ளார்.