திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் அருகே உள்ளது சின்னாகவுண்டன்பட்டி. இப்பகுதியில் பெண் ஒருவர் முகம் சிதைந்த நிலையில் இறந்து கிடப்பதாக புத்தாநத்தம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல் துணை கண்காணிப்பாளர் குத்தாலிங்கம், வையம்பட்டி காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
தலையில் கல்லைப் போட்டு பெண் கொலை - காவல் துறையினர் விசாரணை! - தலையில் கல்லைப் போட்டு பெண் கொலை
திருச்சி: மணப்பாறை அருகே தலையில் கல்லைப் போட்டு இளம் பெண்ணை கொலை செய்தவர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
அந்தப் பெண்ணின் தலையில் போடப்பட்ட கருங்கல், மூக்குக் கண்ணாடி, மதுபாட்டில் ஆகியவை அருகில் கிடந்தன. பெண்ணின் முகம் சிதைந்த நிலையில் இருந்ததால் அடையாளம் காண முடியவில்லை.
பெண்ணின் சடலத்தை மணப்பாறை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த காவல்துறையினர், சம்பவ இடத்தில் கிடைத்த தடயங்கள் மூலம் கொலை செய்யப்பட்ட பெண் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? கொலையாளி யார்? என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இக்கொலைச் சம்பவம் இப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.