குஜராத் மாநிலம் கச்சில் அருகே உள்ள ஜக்கானியா கிராமத்தில் வசித்துவருபவர் சிவ்ஜி. இவரது மனைவி பாவ்னா. இருவர்களுக்கு துருபி (10), கிஞ்சல் (7), தர்மிஷ்தா (2) என்ற மூன்று மகள்கள் இருந்தனர். இந்நிலையில், குடும்பத் தகராறு காரணமாக கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் தீவிரமடைந்தது.
குடும்பத் தகராறு : மனைவி, 3 பெண் குழந்தைகளை கொலை செய்த கொடூரம் - மனைவி மற்றும் மூன்று பெண் குழந்தைகள் கொலை
அகமகதாபாத்: குடும்பத் தகராறு காரணமாக மனைவி, மூன்று பெண் குழந்தைளை கொலை செய்த கொடூரம் குஜராத் மாநிலம் கச்சில் நிகழ்ந்துள்ளது.
இதனால், ஆத்திரமடைந்த சிவ்ஜி தனது மனைவிக்கு விஷம் கொடுத்து கொல்ல முயற்சித்தார். இதையடுத்து, வீட்டிலிருந்து தப்பி வெளியே சென்ற பாவ்னாவை, அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இருந்தபோதும், அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இதனிடையே, வீட்டில் தனியாக இருந்த தனது மூன்று பெண் குழந்தைகளையும் கூர்மையாக ஆயுதங்களால் தாக்கி சிவ்ஜி கொலை செய்தார். இது பற்றி தகவலறிந்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவாக உள்ள சிவ்ஜியை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.