காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அருகேயுள்ள பழந்தண்டலம் பகுதியில் வசித்துவந்த முருகன் என்பவரை, நேற்று முன்தினம் காரில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்துவிட்டு தப்பிச்சென்றனர்.
குன்றத்தூர் இளைஞர் கொலை வழக்கு: குற்றவாளிகள் நீதிமன்றத்தில் சரண் - Kunrathur murder case
விழுப்புரம்: குன்றத்தூரில் இளைஞர் ஒருவரை வெட்டிப் படுகொலை செய்த வழக்கில் ஐந்து பேர் இன்று விழுப்புரம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
Kunrathur murder case, Acquest arrested
இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், கொலையாளிகளைத் தேடிவந்தனர். இந்நிலையில் முருகன் கொலையில் தொடர்புடைய மணிகண்டன், தினேஷ், கருணாகரன், ராம், மணிகண்டன் ஆகிய ஐந்து பேர் நேற்று விழுப்புரம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இதையடுத்து இவர்களை 15 நாள்கள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க...மெரினா கடற்கரை கடைகளின் வாடகை விவரத்தை தெரிவித்த மாநகராட்சி