கிருஷ்னகிரி: ஓசூரில் வீட்டில் தனியாக உள்ள பெண்களை நோட்டமிட்டு கொள்ளையடிக்க தொடங்கிய கும்பலை காவல் துறையினர் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஓசூர் மாநகராட்சியிலுள்ள வேலு நகரில் வசித்து வருபவர் பார்த்திபன். இவர் தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வருகிறார். செப்டம்பர் 2ஆம் தேதியன்று பார்த்திபன் வேலைக்குச் சென்ற நிலையில் அவரது மனைவி சர்மிளா, மகன்களுடன் பக்கத்து வீட்டு பெண் இருந்த நிலையில், 5 பேர் கொண்ட அடையாளம் தெரியாத கும்பல் உள்ளே நுழைந்து, வீட்டிலிருப்பவர்களைத் தாக்கி 8.5 பவுன் தங்கத்தை கொள்ளையடித்து சென்றதாக பாதிக்கப்பட்ட சர்மிளா ஓசூர் சிப்காட் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
இச்சம்பவம் தொடர்பாக விசாரணையைத் தொடங்கிய சிப்காட் காவல் துறையினர், கொள்ளைபோன நாளன்று பக்கத்து வீட்டு பெண்ணான பூமிகாவிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்தனர்.
அப்போது, பூமிகாவின் காதில் இருந்த ஒருப்பக்க கம்மலை கொள்ளையர்கள் பறித்து சென்றதாக அவர் அளித்த வாக்குமூலம் காவல் துறையினருக்கு சந்தேகத்தைக் கிளப்பியது.
மதுபோதையில் குத்தாட்டம் போட்ட பேரூராட்சி செயல் அலுவலர்: வீடியோ வைரல்...!
ஒட்டுமொத்த காவல் துறையினரின் கவனமும் பூமிகா மீது திரும்பிய நிலையில், அதன்பின்னர் அவரளித்த தகவல்கள், விசுவின் திரைப்படமான சிதம்பர ரகசியம் படத்தில் அமைந்திருக்கும் காட்சியான, “வயதான பாட்டி ஒருவர் வேலைக்காக சில வீட்டுக்குச் சென்று, அந்த வீட்டில் யார் யார் உள்ளார்கள் என குற்றவாளிகளுக்கு தகவல் கொடுத்து, அதன் பிறகு அந்த வீட்டை கொள்ளையடிக்கும் முயற்சியில் இறங்குவர்” என்பது போன்ற காட்சியை நினைவுபடுத்தும் விதமாக இருந்தது.
இதனைக் கேட்ட காவல் துறையினர் திகைத்துள்ளனர். திரைப்படங்களில் வரும் கதையைப் போலவே, சின்ன எலசகிரி வேலு நகரிலுள்ள சர்மிளா குடும்பத்தாரை பக்கத்து வீட்டில் இருந்த கொள்ளைக் கும்பலின் தலைவி பூமிகா நீண்ட நாட்களாக நோட்டமிட்டு வந்துள்ளார். சம்பவத்தன்று பகல் நேரத்தில் பூமிகாவின் கிழிந்த துணியைத் தைத்துத் தருமாறு சர்மிளா வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.