கன்னியாகுமரி: பெங்களூருவில் இருந்து கடத்திவரப்பட்ட குழந்தை பாதுகாப்பாக பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
கன்னியாகுமரி - கேரள எல்லையில் குழந்தையை கடத்தி வந்த தம்பதியை காவல் துறையினர் கைதுசெய்தனர். அதனைத் தொடர்ந்து குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டு, காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இச்சூழலில் குழந்தை லோகிதாவின் தாய் கார்த்திகாவும், உறவினர்களும் பெங்களூரில் இருந்து கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் அந்த குழந்தையை பெங்களூரு காவல் துறையினர் வாயிலாக பெற்றோரிடம் ஒப்படைத்தார்.
கடத்தப்பட்ட குழந்தை பெற்றோரிடம் ஒப்படைப்பு தமிழ்நாடு காவல் துறையினருக்கு நன்றி தெரிவித்து, குழந்தையை அவர்கள் பெற்றுக் கொண்டனர். இதுதொடர்பான வழக்கை பெங்களூரு மெஜஸ்டிக் காவல் துறையினர் கையாண்டு வருவதால் ஜான் ஜோசப்பையும் தங்களுடன் பெங்களூருக்கு அழைத்துச் சென்றனர்.