தமிழ்நாடு

tamil nadu

குமரியில் தொடரும் கொள்ளை: ஒரே இரவில் மூன்று கடையில் கைவரிசை காட்டிய திருடர்கள்!

By

Published : Dec 22, 2020, 11:52 AM IST

கன்னியாகுமரி: அஞ்சுகிராமம் அருகே ஒரேநாள் இரவில் மளிகைக் கடை, குடோன், ஆக்கர் கடையை உடைத்து கைவரிசைக் காட்டிய அடையாளம் தெரியாத நபர்களை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

குமரியில் தொடரும் கொள்ளை: ஒரே நள்ளிரவில் மூன்று கடையில் கைவரிசை காட்டிய அடையாளம் தெரியாத நபர்கள்!
குமரியில் தொடரும் கொள்ளை: ஒரே நள்ளிரவில் மூன்று கடையில் கைவரிசை காட்டிய அடையாளம் தெரியாத நபர்கள்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொள்ளை, திருட்டு, வழிப்பறி போன்றவை தொடர்ந்து நடந்த வண்ணம் இருந்துவருகிறது. மாவட்ட காவல்துறை சார்பில் எவ்வளவோ தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் இந்தக் குற்றச் செயல்கள் நின்றபாடில்லை.

கடந்த சில தினங்களுக்கு முன்பு பொட்டல்குளம் அருகிலுள்ள ஒரு வீட்டில் பகல் நேரத்தில் புகுந்த கொள்ளையர்கள் 57 பவுன் நகையை திருடிச் சென்றனர். அதனைத் தொடர்ந்து மயிலாடியில் மெயின் ரோட்டில் அமைந்துள்ள உணவகத்தின் ஷட்டரை உடைத்து உள்ளே நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள், உணவகத்தில் இருந்து மூன்றாயிரம் ரூபாயை திருடிச் சென்றனர்.

இந்நிலையில், அஞ்சுகிராமம் வழுக்கம்பாறை மெயின் ரோட்டில் சங்கரலிங்கபுரம் சந்திப்பில் மகேஷ் என்பவர் இன்று (டிச. 22) காலை வழக்கம்போல் கடை திறக்க வந்துள்ளார். அப்போது கடையின் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தது.

மேலும், சுமார் ஐந்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள சிகரெட் பாக்கெட்டுகள் திருடப்பட்டிருந்தது. கல்லாப் பெட்டியில் இருந்த மூன்றாயிரம் ரூபாய் திருடப்பட்டிருந்தது.

இதேபோல், அஞ்சுகிராமம் வாரியூர் சந்திப்பில் உள்ள முட்டை குடோன் பூட்டை உடைத்து சுமார் ஆயிரம் முட்டைகள் திருடப்பட்டிருந்தது. மேலும் அதே பகுதியில் உள்ள ஆக்கர் கடையில் கல்லாப்பெட்டியை இரும்புக் கம்பி கொண்டு உடைத்து ரூபாய் 5000 பணம் மற்றும் விலை மதிப்புள்ள ஆக்கர் பொருட்களும் கொள்ளை போயுள்ளது. இந்த சம்பவங்கள் குறித்து பாதிக்கப்பட்ட கடை உரிமையாளர்கள் அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்திவருகின்றனர். மேலும் அருகில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிப் பதிவுகளை வைத்து கொள்ளையர்களை பிடிக்க காவல் துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க...29 ஆண்டுகால கேரள கன்னியாஸ்திரி மரண வழக்கு ஓர் பார்வை...

ABOUT THE AUTHOR

...view details