தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

போதைப் பொருள் வழக்கு: மீண்டும் ஒரு கன்னட நடிகை கைது! - கன்னட நடிகை ஸ்வேதா குமாரி

மும்பை: போதைப் பொருள் வழக்கில் மீண்டும் ஒரு கன்னட நடிகை கைது செய்யப்பட்டுள்ளார்.

போதைப்பொருள் வழக்கு: மீண்டும் ஒரு கன்னட நடிகை கைது!
போதைப்பொருள் வழக்கு: மீண்டும் ஒரு கன்னட நடிகை கைது!

By

Published : Jan 5, 2021, 2:25 PM IST

பாலிவுட்டை அடுத்து கன்னட திரையுலகில் போதைப் பொருள் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இந்த விவகாரத்தில் பிரபல இளம் நடிகைகளான ராகிணி திரிவேதி செப்டம்பர் 4ஆம் தேதி கைது செய்யபட்டார். அதையடுத்து நடிகை சஞ்சனா கல்ராணி உட்பட 14 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் தற்போது, போதைப் பொருள் வைத்திருந்ததாகக் கூறி கன்னட நடிகை ஸ்வேதா குமாரியை போதைப் பொருள் தடுப்பு பிரிவு (என்சிபி) காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடம் போதைப் பொருள் வைத்திருந்தது குறித்து நேற்றிரவு (ஜன. 4) விசாரணை நடத்திய காவல் துறையினர் இன்று (ஜன. 5) ஸ்வேதா குமாரியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த உள்ளனர்.

இது குறித்து என்சிபி மண்டல இயக்குநர் சமீர் வான்கடே கூறுகையில், “குமாரியின் மேல் போதைப் பொருள் பயன்படுத்திய வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க...சின்னத்திரை நடிகை சித்ராவின் கணவர் ஹேம் நாத் கைது

ABOUT THE AUTHOR

...view details