தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

நில அபகரிப்பு செய்தி வெளியிட்ட தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்: தந்தை கண்முன்னே ஓட ஓட வெட்டிக் கொலை! - Kanchipuram based reporter murder

காஞ்சிபுரம்: புதுநல்லூரில் நில அபகரிப்பு குறித்து செய்தி வெளியிட்ட தனியார் தொலைக்காட்சி செய்தியாளரை, ரவுடிகள் தந்தை கண் முன்னே ஓட ஓட வெட்டிக் கொலை செய்துள்ளனர்.

நில அபகரிப்பு செய்தி வெளியிட்ட தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்: தந்தை கண்முன்னே ஓட ஓட வெட்டிக் கொலை!
நில அபகரிப்பு செய்தி வெளியிட்ட தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்: தந்தை கண்முன்னே ஓட ஓட வெட்டிக் கொலை!

By

Published : Nov 9, 2020, 10:54 AM IST

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சோமங்களம் பழைய நல்லூரில் தளபதி தெருவில் வசிப்பவர் மோசஸ்(28). இவர் தனியார் தொலைக்காட்சியில் ஸ்ரீ பெருமந்தூர் தொகுதி செய்தியாளரக பணிபுரிந்து வருகின்றார். இதனால் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு பழைய நல்லூர் பகுதியில் உள்ள ஏரிகளை ஒரு சிலர் ஆக்கிரமித்து விற்பனை செய்து வருவதாக அவர் பணி புரியும் தொலைக்காட்சியில் செய்தி ஒன்றை ஒளிபரப்பு செய்துள்ளார். அந்த செய்தியும் ஒளிபரப்பானது

அதனை அடுத்து, ஏரி இடங்களை ஆக்கிரமித்து விற்பனை செய்து வரும் நபர்கள் ஒருசிலர் மோசஸிடம் நேரில் சென்று கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். உடனே இது குறித்து மோசஸ் தந்தையிடம் கூறியுள்ளார். உடனடியாக கொலை மிரட்டல் விட்டதாக கூறி சோமங்களம் காவல் நிலையத்திற்கு சென்று புகார் ஒன்றை அளித்துள்ளார். ஆனால் காவல் துறையினர் புகாரை ஏற்காமல் நான் பார்த்துக் கொள்கின்றேன் என்று கூறி அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில் நேற்றிரவு (நவ. 9) சுமார் 11:00 மணிக்கு மோசஸ் அவரது நண்பரிடம் பேசிவிட்டு வீட்டின் அருகே சென்று கொண்டு இருந்துள்ளார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று போர் கொண்ட கும்பல் மோசஸை வழிமறித்து, அவர்கள் வைத்திருந்த பட்டா கத்தியால் ஒட ஒட வெட்டி உள்ளனர். அப்போது மோசஸின் அலறல் சத்தம் கேட்டு வந்த தந்தை பார்த்த ரவுடிகள் தப்பித்து ஓடியுள்ளனர். ரவுடிகளால் வெட்டப்பட்டதில், ரத்த வெள்ளத்தில் மிதந்த மொசஸை அவரது தந்தை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்துள்ளார். மருத்துவமனையில் மோசஸை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் தந்தை கண்முன்னே ஓட ஓட வெட்டிக் கொலை

இதனையடுத்து இது குறித்து தகவலறிந்த சோமங்களம் காவல் துறையினர் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு வந்து, இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் மோசஸ் கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் நல்லூர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (எ) எலி அப்பு, அட்டை (எ) வெங்கடேஷ், மனோஜ், நவமணி ஆகியோரை சோமங்கலம் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இதில் நவமணி மீது ஏற்கனவே கொலை முயற்சி வழக்கு உள்ளது. இதேபோன்று விக்னேஷ் மீது வழிப்பறி கொள்ளை வழக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படுங்க...'இனி சாராயம் கடத்துவ...' - அலேக்காக கைது செய்த போலீசார்

ABOUT THE AUTHOR

...view details