தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

போதைமருந்துக்கு பதில் கஞ்சா.. பண்டமாற்று முறை செய்த மருத்துவர் கைது - Puducherry crime news

புதுச்சேரி: போதை மருந்துகளைக் கொடுத்து கஞ்சா பெற்றுக்கொண்ட மருத்துவரும் அவரது கூட்டாளிகளும் கைது செய்யப்பட்டனர்.

போதைமருந்துக்கு பதில் கஞ்சா.. பண்டமாற்று முறை செய்த மருத்துவர் கைது
போதைமருந்துக்கு பதில் கஞ்சா.. பண்டமாற்று முறை செய்த மருத்துவர் கைது

By

Published : Dec 11, 2020, 3:10 AM IST

புதுச்சேரி முதலியார்பேட்டை தனியார் விடுதியில் போதை பொருட்கள் பயன்படுத்திய தேவநாதன், அவரது தோழி நாத்தலி, ஆரோவில் பகுதியை சேர்ந்த ரஷ்ய இளைஞர் ஆகியோரை கடந்த 3 நாட்களுக்கு முன்பு காவல்துறையினர் கைது செய்தனர்.

இதுகுறித்து விசாரணை நடத்தியபோது, லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்த பிலிப்ஸ் என்பவருக்கும் இவர்களுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் விசாரித்ததில், "கஞ்சா பழக்கத்திற்கு அடிமையான ஜிப்மர் மருத்துமனையின் மருத்துவர் துரைராஜன், இவருக்கு போதை மருந்து ஊசியை கொடுப்பதும் அதற்கு பதிலாக, பிலிப்ஸ் கஞ்சா கொடுப்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர் துரைராஜன், அவரது கூட்டாளிகள் பார்த்தசாரதி, மணிகண்டன் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

ABOUT THE AUTHOR

...view details