தாம்பரத்தையடுத்த பீர்க்கன்காரணை பகுதியில் நான்கு நாட்களுக்கு முன்பு, வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து சீனிவாசன் நகரைச் சேர்ந்த சுசித்ரா (46), மூவேந்தர் நகரைச் சேர்ந்த உஷா (29) ஆகியோரிடமிருந்து இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் கத்தி முனையில் தங்கச்சங்கிலிகளை பறித்துச் சென்றனர்.
இதனையடுத்து இந்நிகழ்வு குறித்து வழக்குப்பதிவு செய்த பீர்க்கன்காரணை காவல் துறையினர், அப்பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தனிப்படை அமைத்து, பெருங்களத்தூர் அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுவந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த நபர்களை மடக்கிப் பிடித்து விசாரித்த போது, அவர்கள் புனித தோமையர் மலை சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.