விருகம்பாக்கம், தாங்கல் தெருவில் வசித்து வருபவர் விஜயகுமார் (வயது 38). இவர் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். மனைவி கர்ப்பமாக இருப்பதால், கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு விஜயகுமார் தனது மனைவியை அழைத்துக் கொண்டு சொந்த ஊருக்குச் சென்றுள்ளார். பின்னர் கரோனா ஊரடங்கால் விஜயகுமார் வீட்டிற்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது சென்னை திரும்பிய விஜயகுமார், விருகம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டிற்குச் சென்ற போது, கதவு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது பீரோவில் இருந்த 60 சவரன் நகையும், 12 ஆயிரம் ரூபாய் பணமும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.