சென்னை சௌகார்பேட்டை என்எஸ்சி போஸ் சாலையில் மோகன் லால் ஜுவல்லர்ஸ் மொத்த நகைக்கடை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளர் மோகன்லால் முகுந்த் சந்த் கட்டாரி. இவர்களது குடும்பத்தினர் சாந்திதேவி, மோகன்லால், சுரேஷ்குமார், ரேகா, ஸ்ரீதேவி ஆகியோர் இயக்குனர்களாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்த நிறுவனம் பல்வேறு பிரபல நகைக்கடைகளுக்கு நகைகளை மொத்தமாக டிசைன் செய்து அனுப்புகிறது. ஆனால் இந்நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலின் பேரில், கேரளாவிலும், சென்னை, மதுரை, நெல்லை உள்ளிட்ட 32 இடங்களில் வருமான வரித்துறை அலுவலர்கள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.