திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பாலகிருஷ்ணாபுரம் சாலை சந்திப்பில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
வாகன சோதனையில் ஈடுபட்ட காவல் துறை!
அப்போது ஆந்திராவிலிருந்து சென்னை நோக்கி வந்த பேருந்திலிருந்து பிளாஸ்டிக் பையுடன் இறங்கிய மூவர், வாகன தணிக்கையில் இருந்த காவல் துறையினரை கண்டு ஓட ஆரம்பித்தனர். அவர்களைப் பின்தொடர்ந்து மடக்கிப் பிடித்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில் செங்கல்பட்டு ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த கார்த்திக் (26), திருமுல்லைவாயில் பெரியார் நகரைச் சேர்ந்த சாமுவேல் ஷ்யாம் (19), பாடி மண்ணூர்பேட்டை சேர்ந்த வினோத்குமார் (17) என்பதும் தெரியவந்தது.