தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

உறவினர் காரை கொடுக்கவில்லை: ஆத்திரத்தில் காரை பெட்ரோல் ஊற்றி எரித்த இளைஞர்...! - உறவினர் காரை கொடுக்கவில்லை

சென்னை: உறவினரின் காரை ஓட்டுவதற்கு கொடுக்காததால் ஆத்திரமடைந்து பெட்ரோல் ஊற்றி கொளுத்திய மோட்சம் திரையரங்கின் உரிமையாளர் மகனை, கோட்டூர்புரம் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஜர்விஸ்
கைது செய்யப்பட்ட ஜர்விஸ்

By

Published : Oct 2, 2020, 6:36 PM IST

சென்னை சைதாப்பேட்டை சின்னமலை பகுதியில் வசித்து வருபவர் டோமினிக்(56). இவரது மனைவி பிரின்ஜின், மகன் டார்வின். கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பாக ஹூன்டாய் ஐ- 20 காரை டோமினிக் வாங்கியுள்ளார்.

அப்போது டோமினிக் மனைவியின் தம்பி மகனான ஜர்விஸ் என்பவரை டோமினிக்கின் மகன் டார்வின் காரில் ஏற்றவும், ஓட்டவும் கொடுக்காததால் ஆத்திரமடைந்த ஜர்விஸ் கீழே கிடந்த கல்லை எடுத்து கார் கண்ணாடியை அடித்து உடைத்துள்ளார்.

இதனால் டோமினிக் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் மீது புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து ஜர்வீசுக்கும், டார்வீனுக்கும் கடந்த ஒரு வருடமாக பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட ஜர்விஸ்

இந்நிலையில் இன்று (அக். 2) அதிகாலையில் டோமினிக் வீட்டருகே காரில் நண்பர்களுடன் வந்த ஜர்விஸ் திடீரென்று மறித்து தகராறில் ஈடுபட்டுள்ளார். பிறகு தான் கையில் வைத்திருந்த பெட்ரோலை எடுத்து டோமினிக்கின் கார் மீது ஊற்றி எரித்துவிட்டு தப்பியோடினார். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் எரிந்து கொண்டிருந்த காரை உடனடியாக அணைத்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள கோட்டூர்புரம் காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர். பின்னர் காரை எரித்த வழக்கில் ஜர்விஸை கைது செய்தனர். கார் ஓட்ட தராத ஆத்திரத்தில் பழிவாங்க, காரை தீ வைத்ததாக கைது செய்யப்பட்ட ஜர்விஸ் காவல் துறையினரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

சிசிடிவி காட்சி

இதில் ஜர்விஸ் புரசைவாக்கத்தில் இயங்கிய மோட்சம் திரையரங்கின் உரிமையாளரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க...நேற்று ராகுல் காந்தி...இன்று டெரிக் ஓ பிரையன்...!

ABOUT THE AUTHOR

...view details